1. வாழ்ந்திடுவோம் வாங்க
- John Britto Parisutham
- Jan 2, 2021
- 1 min read
அரண்மனைக்கு வாங்க
அரசரையேப் பாருங்க
அடுத்த ராஜா யாருன்னு
அவரு சொல்லு வாருங்க
எழிலனுக்கு ஆசை
சம்பாரிச்சான் காசை
புத்தாடை வாங்கி
புறப்பட்டான் ஏங்கி
பிச்சைக்காரர் குளிருக்கு
தன்னாடை கொடுத்தான்.
வெகுண்ட மாட்டை அடக்கி
நல்ல பெயர் எடுத்தான்.
அரசர் பிச்சைக்கார
வேடம் போட்ட தறிந்தான்
கருணை வீரம் நிறைந்து
மனதில் இடம் பிடித்தான்.
மானம் காத்த பருத்தியை
சிறந்த பூ என்றான்.
காட்சி காணும் ஒளியை
சிறந்த ஒளி என்றான்.
பகுத்து பார்க்கும் அறிவினை
சிறந்த ஆயுதம் என்றான்.
பார் போற்றும் மன்னனாய்
தேர்வு பெற்று நின்றான்.
எழிலனைப் போல்
பரிவாய்
எழிலனைப் போல்
துணிவாய்
எழிலனைப் போல்
அறிவாய்
வாழ்ந்திடுவோம்
வாங்க.
*******
கருத்து: அறிவு, துணிவு, பரிவு, கடுமையான உழைப்பு, தலைமைத்துவம்
எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்
Comments