தென்னை ஓலை பாம்பு - பாரம்பரிய விளையாட்டு 12
- John Britto Parisutham
- 1 day ago
- 1 min read
தேவையான பொருட்கள்: தென்னை ஓலை
செய்முறை: ஒரு தென்னை ஓலையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நரம்பு பகுதியை ஓர் அங்குலம் விட்டு கவனமாக கிழித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது சடை பின்னுவது போல, ஒரு பக்க ஓலையை எடுத்து மறுபக்கத்தில் போடுங்கள். அதே போல மறுபக்கத்தில் இருக்கும் ஓலையை எடுத்து எதி்ர் பக்கம் போடுங்கள். இப்படியாக ஒன்றின் மேல் ஒன்று போட்டு வாருங்கள். நுனிப்பகுதி வரும்பொழுது பாம்பு வந்துவிடும்.
விளையாட்டு: பாம்பை வைத்துக்கொண்டு எப்படி விளையாட விரும்புகிறீர்களோ அப்படி விளையாடி மகிழுங்கள்.
கூடுதல் விவரம்
சிறுவர்கள் மணிக்கட்டில் கட்ட வாட்ச் செய்யலாம். மோதிரம் செய்யலாம். சடை செய்யலாம்.
*********
Comments