பூவரசு இலையில் ஊதுகுழல்
- John Britto Parisutham
- 1 day ago
- 1 min read
தேவையான பொருட்கள்: பூவரசு இலைகள்
செய்முறை: ஒரு பூவரசு இலையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நரம்பு பகுதியை நீக்கிவிடுங்கள். ஒரு பாதி போதும். அதனை சுருட்டு சுருட்டுவது போல சுருட்டுங்கள். ஒரு பக்கத்தை தட்டையாக்குங்கள். உங்கள் நாதஸ்வரம் தயார்.
விளையாட்டு: பூவரசு இலை நாதஸ்வரத்தின் தட்டை பகுதியை வாயில் வைத்து ஊதிப்பாருங்கள். “பீ..ப்பீ..” என ஒலி வரும்.
கூடுதல் விவரம்:
தென்னை ஓலையிலும் நாதஸ்வரம் செய்யலாம். பூவரசு இலைகளைப் பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வார்கள். அதற்கு ஓலைக் கொழுக்கட்டை என்று பெயர். இட்லி சுடும் போது, சாதம் வடிக்கும் போது பூவரசு இலைகளைப் போட்டு அதன் சாறு அதில் இறங்குவது போல் செய்யலாம். பூவரசு காயைச் சுற்றிவிட்டு பம்பரம் போல் விளையாடலாம். சிலர் பூவரசு பூவை இரத்தினக்கல் மோதிரமாகப் போட்டு அழகுக் காண்பிப்பர்.
Comentarios