குரங்கும் பந்தும்
- John Britto Parisutham
- Apr 10
- 1 min read
தேவைப்படும் பொருட்கள்: ஒரு பந்து
அமைப்பு: சாட் பூட் திரி போட்டு ஒரு நபரை ‘குரங்கு’ கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவரை நடுவில் நிறுத்தி, மற்றவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு குழுவினர் ‘குரங்கு’க்கு முன் பக்கமும், மற்றொரு குழுவினர் ‘குரங்கு’க்கு பின் பக்கமும் நிற்க வையுங்கள். இப்பொழுது ஆட்டம் தொடரட்டும்.
விளையாட்டு: முன்பக்க குழுவினர் பந்தை குரங்கு பிடிக்கா வண்ணம், பின்பக்க குழுவினருக்கு அனுப்பவேண்டும். அதை பின்பக்க குழுவினர் பிடித்து அதே போல தூக்கிப் போட வேண்டும். விதி என்னவென்றால் குரங்கின் தலைக்கு மேலே பந்து போகக்கூடாது. அப்படி பந்து போகும் போது குரங்கு பிடித்துவிட்டால், அவர் குழுவில் சேர்ந்து விடுவார். தூக்கிப் போட்டவர் குரங்காக மாறிவிடுவார்.
Kommentarer